Monday, September 27, 2010

ஆக்ஷன் ஹீரோக்களில் முதலிடம் ராம்போ புகழ் சில்வஸ்டர் ஸ்டாலன்

உலகின் சிறந்த டாப் 10 ஆக்ஷன் ஹீரோ பட்டியலில் கலிபோர்னியா கவர்னர் அர்னால்டை பின்னுக்குத் தள்ளி ராம்போ புகழ் சில்வஸ்டர் ஸ்டாலன் முதலிடம் பிடித்துள்ளார்.


இந்த பட்டியலில் நடிகையான ஏஞ்சலினா ஜூலியும் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்தில் மைபுரோடின் காம் இணையதளம் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோக்கள் குறித்து ஆய்வு செய்யது. அதன் விவரம்: ‘ராம்போ’ படத்தின் மூலம் பிரபலமான 64 வயது சில்வஸ்டர் ஸ்டாலன் 31 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். இவரை தொடர்ந்து ‘டெர்மினேட்டர்’ படத்தில் நடித்து புகழ்பெற்று, கலிபோர்னியா கவர்னராக இருக்கும் அர்னால்டு 24 சதவீதத்துடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
புரூஸ் வில் 15 சதவீதம், புரூஸ் லீ 9 சதவீதம், ஜீன் கிலாடி 7 சதவீதம், ஸ்டீவன் சீகல் 4 சதவீதத்துடன்அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். அண்மையில் வெளியான ‘சால்ட்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ஏஞ்சலினா ஜூலி, ஆண்கள் ஆக்கிரமித்துள்ள இந்த பட்டியலில் 2 சதவீதம் வாக்கு பெற்று 7வது இடத்தை பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment

Site Meter