Sunday, September 26, 2010

திருமணத்துக்கு முந்திய உறவில் பிறந்த குழந்தைக்கு தந்தை யார்?

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணத்துக்கு முன்னரான உறவு ஒன்றின் மூலம் பிறந்த  சுபேக்கா என்கிற 07 வயதுப் பெண் குழந்தைக்கு...
சரோஜினி (வயது-26) என்பவர்  அதே பிரதேசத்தைச் சேர்ந்த  பேரின்பராசா (வயது 32) என்பவரிடம் இருந்து தாபரிப்பு கோரி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

 இருவருக்கும் பிறந்த குழந்தையே சுபேக்கா என்றும் சுபேக்காவை பராமரிக்க பேரின்பராசா பணம் தர வேண்டும் என்றும்  கோரி இருந்தார்.  ஆயினும் சுபேக்காவுக்கு தகப்பன் அவர் அல்லர் என்று பேரின்பராசா திட்டவட்டமாக மறுத்து விட்டார்.



இவ்வழக்கு இந்நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்திருக்கின்றது.  இந்நிலையில் பேரின்பராசாவினதும், சிறுமி சுபேக்காவினதும் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு மரபணுப் பரிசோதனைக்காக நீதிமன்றால் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 நேற்று இவ்வழக்கு இடம்பெற்றபோது கல்முனை மேலதிக நீதிவான் எம்.இளஞ்செழியன் சிறுமி சுபேக்காவின் தகப்பன் பேரின்பராசாதான் என்பது மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என திறந்த நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்தார்.

 எனவே தகப்பனான பேரின்பராசா கடந்த  இரு வருட காலத்துக்குரிய தாபரிப்புப் பணத்தை மாதாந்தம் 7500 ரூபாய்ப்படி ரொக்கமாக செலுத்த வேண்டும் என்றும் இனி மேல் மாதாந்தம் தவறாது 7500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Site Meter