Sunday, September 26, 2010

இலங்கைக்கு 213 மில்லியன் டாலர் கடன் வழங்க ஐஎம்எப் ஒப்புதல்!

வாஷிங்டன்: இலங்கைக்கு 213 மில்லியன் டாலர் கடன் வழங்க ஐஎம்எப் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் அந்நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை மீண்டும் தூக்கி நிறுத்த முடியும் என ஐஎம்எப் நம்பிக்கை தெரிவித்துள்ளது.



ஏற்கெனவே நான்குமுறை இதுபோன்ற கடன்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது ஐஎம்எப். இப்போது வழங்கப்பட்டுள்ள 5வது தவணை கடனையும் சேர்த்தால் இதுவரை இலங்கை 1.3 பில்லியன் டாலர்களை ஐஎம்எப்பிடமிருந்து பெற்றுள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த தரப்படும் இத்தகைய கடன்களுக்கான நிபந்தனைகளை இலங்கை திருப்திகரமான முறையில் நிறைவேற்றி வருவதால், ஐந்தாம் முறையாக கடன் தருவதாக ஐஎம்எப் அறிவித்துள்ளது.

"இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரம் திருப்திகரமான விதத்தில் முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டை விட அரசியலில் நிலையான தன்மை நிலவுவதைப் பார்க்க முடிகிறது..." என்று ஐஎம்எப் தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

1 லட்சம் தமிழர்களை இறுதிப் போரில் கொன்று குவித்த போர்க்குற்றவாளியான இலங்கைக்கு சர்வதேச நிதி அமைப்புகள் கடன் தரக்கூடாது என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. ஆனால் இந்தியா மற்றும் சீனாவின் பகிரங்க ஆதரவு காரணமாக கடன் வழங்கியது ஐஎம்எப்.

No comments:

Post a Comment

Site Meter