Saturday, October 9, 2010

ரஜினியைக் கடவுளாக்கிய 'கிச்சிடி'!

'தமிழகத்தில் ரஜினிக்கு எத்தனையோ கோயில்கள் உள்ளன. அப்படியென்றால் அவர் கடவுள்தானே!' - இது இந்தியில் சமீபத்தில் வெளியான..
கிச்சிடி என்ற படத்தின் விளம்பத்தில் வரும் ஒரு வாசகம்.

மும்பை சென்றிருந்த ரஜினியின் பார்வையில் இந்த விளம்பரம் பட்டுவிட்டது.

உடனே தனது உதவியாளரை அழைத்தவர், கிச்சிடி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம், எதற்காக இப்படியொரு வாசகம் அந்த விளம்பரத்தில் வருகிறது என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்.

உடனடியாக ரஜினியைத் தொடர்பு கொண்டனர் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும். அவர்களுக்கு ரஜினியின் உதவியாளரிடமிருந்து போன் வந்ததையே நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் இருந்திருக்கிறார்கள்.

அவர்களிடம், "என்னை கடவுள் என்று அழைப்பதை நான் ஒருபோதும் விரும்பவதில்லை. எனக்கு மிகவும் அசௌகரியமான வார்த்தை அது. அப்படி என்னை சித்தரித்திருந்தால் அதை நீக்கிவிடுங்கள்" என்று ரஜினி கூறியதாக உதவியாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிச்சிடி பட தயாரிப்பாளர் மாதேஜா கூறுகையில், "ரஜினி சார் மீது நாங்கள் வைத்திருக்கும் மதிப்பு கொஞ்சமல்ல. உண்மையிலேயே சினிமா  துறைக்கு அவர் கடவுள் மாதிரிதான். சினிமா நொடித்துப் போன நேரத்திலெல்லாம் அவர் படங்களே கைகொடுத்து உதவுகின்றன.

எங்கள் படத்தில் ஒரு காட்சியில் வரும் இரு பாத்திரங்கள் கடவுள் எதிரே வந்தால் கூட நம்ப மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். ஒரு காட்சியில் அவர்கள் இருவரும், தமிழ்நாட்டில் ரஜினிகாந்துக்கு கோயில்கள் இருக்கின்றன. அப்படியென்றால் அவர் கடவுள்தானே" என்று கேட்பதாக வைத்திருக்கிறோம்.

ரஜினி சார் மீதுள்ள மரியாதைதான் எங்களை அப்படி ஒரு காட்சியை வைக்கத் தூண்டியது. அது குறித்து அவரிடம் விளக்கிவிட்டோம். அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்தக் காட்சியை எடுக்கவும் ஒப்புக் கொண்டோம்.

ரஜினியின் ரோபோ இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. அவர் படம் வெளியாகும் போது எங்கள் படத்தை வெளியிட்டோம். வேண்டுமென்று இப்படி செய்யவில்லை. நேரம் அப்படி அமைந்துவிட்டது. ரோபோ பெரிய படம். வசூலில் கலக்குகிறது. எங்கள் படம் சுமாராகப் போகிறது... ஆனால் ரோபோவுடன் வெளியானது என்பதே சந்தோஷமான விஷயம்தானே!" என்றார்.

No comments:

Post a Comment

Site Meter