Friday, October 1, 2010

வெளிநாட்டில் பட்டப்படிப்பு : மாணவர்களை ஏமாற்றி பண மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டின் பிரபல பல்கலைக்கழகங்களில் பட்டபடிப்பை மேற்கொள்ள வாய்ய்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி மாணவர்களிடம் 60 லட்சம் ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்த நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் போலி சான்றிதழையும் ..

இவர் வழங்கியதாகக் கூறி, யாழ். பொலிசார் மேற்படி நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள கல்வி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான (65 வயது) நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 




2 comments:

  1. இது தொடர்பான தங்கள் செய்தியின் தற்போதைய நிலைமை பற்றி மற்றைய செய்தியையும் வெளியிடலாமே! தவறுகளை மட்டுமே சுட்டிக் காட்டும் செய்திகள் அவர்கள் நிரபராதிகள் என்று வெளிகொணரப்படும் போது அது தொடர்பான செய்திகளை பிரசுரிக்க தவறுவது ஏன்?

    குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் போது அவர்களின் குற்றம் நிரூபிக்கப்படாமல் அவர்களின் பெயர் குறிப்பிடுவது தவறான செயல் ஆகும். நீங்கள் அவர்களின் web address போட்டு இருக்கிறீர்கள்.

    பிரசுரித்த செய்தி தொடர்பான தற்போதைய நிலைமை பற்றி குறிப்பிட்டு இருந்தால் நல்லது. அது தொடர்பான உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்.

    கல்வி நிலையத்தில் அக்கறையுள்ள நலன் விரும்பி

    ReplyDelete
  2. நாவலர் றோட்ல லக்ஸன் ப்லாசா கட்டிடதுகு கடசி மாடில..NIIT northen inrertational info tech..டிரக்டர் சொனார் தன் மீது வீன் பளி....

    ReplyDelete

Site Meter